விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் பாராட்டு
தென்காசி மாவட்டத்தில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர் ஆகாஷ் பாராட்டு
தென்காசி:
ஆண்டுதோறும் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பழனிக்குமார், பாண்டியாபுரம் யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ், சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம், இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார், அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரோசிலின் செல்வராணி, டி.என்.புதுக்குடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா பரமானந்தா, சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, கரிவலம்வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கலையரசி ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளனர்.
இவர்களை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலெக்டர் அலுவலக அரங்கில் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.