கடையநல்லூர் யூனியன் பகுதியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
கடையநல்லூர் யூனியன் பகுதியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டி, புன்னையாபுரம், போகநல்லூர், திரிகூடபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளில் மண்வரப்பு, அங்கன்வாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சொக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் என பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும், கடையநல்லூர் அருகே உள்ள அனைத்து கல் குவாரிகளையும் கலெக்டர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராதா, உதவி பொறியாளர் ஜான் சுனிர்தராஜ், கவுன்சிலர் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், பஞ்சாயத்து தலைவர்கள் திரிகூடபுரம் முத்தையா பாண்டியன், சொக்கம்பட்டி பச்சைமால், போகநல்லூர் சண்முகப்பிரியா, புன்னையாபுரம் திலகவதி கண்ணன், பஞ்சாயத்து கிளார்க் முருகேசன், தங்கத்துரை, மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.