பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு


பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தென்காசியில் பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்தார்.

தென்காசி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற டிசம்பர் மாதம் 5-ம் தேதி தென்காசிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தென்காசி அருகே உள்ள இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்டமாக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு ெரயிலில் வருகிறார். அங்கிருந்து மேடைக்கு காரில் வருகிறார்.

இந்த நிலையில் மேடை அமைக்கும் பணியை நேற்று மதியம் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சர் வரும் வழி, மேடைக்கு செல்லும் பாதை, வாகனங்கள் நிறுத்தும் இடம், பொதுமக்கள் அமரும் இடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.


Next Story