அனுமதியின்றி செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை-கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை
நீலகிரியில் அனுமதி யின்றி சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி
நீலகிரியில் அனுமதி யின்றி சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் பதிவு
விவசாயத்திற்கு அடுத்தபடியாக நீலகிரியில் சுற்றுலா பெரிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே, பெட் அன்ட் பிரேக்பாஸ்ட், கேம்ப் சைட் முதலிய சுற்றுலா தொழில் செய்யும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் இதுநாள் வரை சுற்றுலாத்துறையில் பதிவு செய்யாமல் பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்கள் www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நடவடிக்கை
பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கு ஊட்டி வென்லாக் சாலையில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர் நேரில் அணுகலாம் என்றும், கூடுதல் தகவல் தேவைப்பட்டால் இ-மெயில் முகவரி touristofficeooty@gmail.com, தொலைபேசி எண் 0423-2443977, 7550009231 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.