"தினமும் யோகா செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்" கலெக்டர் ஆஷா அஜீத் பேச்சு


தினமும் யோகா செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் கலெக்டர் ஆஷா அஜீத் பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினமும் யோகா செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் கூறினார்.

சிவகங்கை


தினமும் யோகா செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் என கலெக்டர் ஆஷா அஜீத் கூறினார்.

யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

யோகா என்பது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் உள்உறுப்புக்களை சீராக செயல்படுத்துவதுடன், மனநிலையை சமநிலைப்படுத்தி, நம்மை சிறப்பாக வழி நடத்தக்கூடிய ஆயுதமாக திகழ்ந்து வருகிறது. யோகாவை பொறுத்தவரையில் 8 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் செய்யும் உடற்பயிற்சியாகும்.

காலையில் எழுந்தவுடன் 20 நிமிடம் அமர்ந்து யோகாசனம் மேற்கொண்டால் உடல்நிலை ஆரோக்கியத்துடன், மனநிலையும் சீராக இருப்பதற்கு வழி வகுக்கும். குறிப்பாக, நாம் மருத்துவமனைக்கு செல்கின்ற அவசியம், முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், பெண்களுக்கு அதிக வேலைப்பளு இருந்தாலும், உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நல்ல மனநிலையுடன் நாம் செய்யும் வேலையை நிலையாக மேற்கொள்ள முடியும். அதற்கு உடல்நிலை நன்றாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருக்க வேண்டுமென்றால் நாள்தோறும் யோகா பயிற்சிகள் மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

உடல்நலன் பாதுகாப்பு

ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி எடுக்கும் போது உடல் வலிமை ஏற்படும். உடல்நிலை பாதுகாக்கப்படுவதுடன் எவ்வித நோய் தொற்றுமின்றி பாதுகாத்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சியும் முக்கியமான ஒன்றாகும். இக்காலகட்டத்தில் ஒவ்வொருவரும் யோகா செய்வதை தன் பணிகளில் முதற்பணியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சத்தியபாமா, கல்லூரி துணை முதல்வர் சரவணன், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், யோகா மருத்துவ அலுவலர் தங்கம், சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமதுரபி மற்றும் கல்லூரி துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரனூர் எஸ்.பிரீத்தி கல்வியியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேராசிரியர்கள் மற்றும் ஆசிரிய-மாணவிகள் பேரணி மூலம் நெகிழி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது. 500 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகா பயிற்சியினை மேற்கொண்டதுடன் ஆசிரியர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த யோகா பயிற்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.


Next Story