14 ஒன்றியங்களில் 1¼ லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்


14 ஒன்றியங்களில் 1¼ லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2023 6:45 PM GMT (Updated: 15 Feb 2023 6:46 PM GMT)

14 ஒன்றியங்களில் 1¼ லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம், கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் மற்றும் விருத்தாசலம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா கடலூர் அருகே திருவந்திபுரம் ஊராட்சியில் நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஊராட்சியில் பல்வேறு இடங்களில் 225 மரக்கன்றுகள் நடப்பட்டன. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.

விழாவில் திட்ட இயக்குனர் (பொறுப்பு) தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story