கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்


கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்
x

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.

திருப்பத்தூர்

கலெக்டர் கொடி ஏற்றினார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

நலத்திட்ட உதவி

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 274 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

மேலும் பல்வேறு துறைகள் சார்பில் 239 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 44 ஆயிரத்து 952 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன், தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ் ராஜா, கலால் உதவி ஆணையர் ஜோதிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா, முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்ராயன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.


Next Story