வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு


வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண்கள் இறந்து விடுவதாகவும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை எனவும், போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில்லை எனவும், பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.

இதனை அடுத்து திடீரென வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, உள்நோயாளிகள்‌ சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு ஆகிய பகுதிகளுக்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், கர்ப்பிணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் டாக்டர்கள். சிவசுப்ரமணியன், செந்தில்குமார், சத்யபாக்கியலட்சுமி, டேவிட் விமல்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story