10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர்
கோவையில் மாரத்தான் போட்டியில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்
கோவை
கோவை விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தனியார் அமைப்புகள் மூலம் கோவையில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று காலை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் 10 கிலோமீட்டர் தூரம் முழுவதுமாக ஓடினர்.
மாரத்தானில் ஓடிய விளையாட்டு வீரர்கள் கூறும் போது, பொதுவாக போட்டிகளை தொடங்கி வைப்பதற்கு தான் கலெக்டர், கமிஷனர் போன்ற உயர் அதிகாரிகள் வருவார்கள். சிலர் சிறிதூரம் ஓடி விட்டு காரில் ஏறி சென்று விடுவார்கள்.
ஆனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மாரத்தானில் 10 கிலோமீட்டர் தூரமும் முழுமையாக ஓடி நிறைவு செய்தனர்.
இது விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்றனர்.