உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
விருதுநகர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நரிக்குடி யூனியன் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி குழந்தைகளில் 23 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்நு கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின்போது, மாணவர்களிடம் அவருடைய ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்கள், தங்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி பயில வேண்டும். நாளை நீங்களும் சிறந்த கலெக்டர்கள், டாக்டர்கள் ஆகலாம். பெற்றோர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு அப்போது குறைவாக இருந்தது. தற்போது நாம் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளது. அதை பயன்படுத்தி கல்வியில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.