அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்


அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
x

திட்ட பணிகள் ஆய்வின் போது அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.

விருதுநகர்


திட்ட பணிகள் ஆய்வின் போது அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.

கலெக்டர் ஆய்வு

விருதுநகர் யூனியனுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் இலக்கை நிர்ணயிப்பது அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும் உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மகளிர் உரிமைத்தொகை

மாணவர்கள் கல்வி அறிவு, திறமை ஆகியவற்றில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு நல்ல ஒரு நிலைமைக்கு சென்று சிறந்த குடிமகனாக உருவாக வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் ஆமத்தூர் கிராமத்தில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்று களப்பணியாளர்கள் மேற்கொண்டுள்ள சரிபார்த்தல் பணியினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் மீசலூர் சிறுகுளம், நீசலூர் கண்மாய் கிழக்கு பக்க வரத்து கால்வாயில் நடைபெறும் சீரமைப்பு பணியையும், தாதம்பட்டியில் உறிஞ்சுகுழி அமைக்கும் பணிகளையும், மருளூத்தில் ஆலமரத்து ஊருணி வரத்து கால்வாய் நீர் உறிஞ்சுகுழி அமைக்கும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story