தொழிற்பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி முடித்தவர்கள் சான்றிதழில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் விவரங்களில் மாற்றம் இருந்தால் அதை சரி செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பயிற்சியாளர் பெயர், தந்தை மற்றும் தாயாரின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றம் இருந்தால் சரி செய்து கொள்ள என்.சி.வி.டி. எம்.ஐ.எஸ். போர்ட்டல் புரோபைல் கிரிவியன்சில் நேரடியாக முன்னாள் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் பயிற்சியாளர்கள் அவர்களது புரோபைலில் உள்ள திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உரிய என்.சி.வி.டி. சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தர்மபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் பெற தர்மபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.