சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட மானியம் கலெக்டர் தகவல்


சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட மானியம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 12 July 2023 11:23 AM GMT)

சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட மானிய உதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்

சிவகங்கை

சிவகங்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட மானிய உதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

சீமைக்கருவேல மரங்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலமாக சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தின் கீழ் இளையான்குடி வட்டாரத்தில் 200 எக்டேர், காளையார்கோவில் வட்டாரத்தில் 40 எக்டேர், மானாமதுரை வட்டாரத்திற்கு 30 எக்டேர் மற்றும் திருப்புவனம் வட்டாரத்திற்கு 30 எக்டேர் வீதம் மாவட்டத்தில் 300 எக்டேரில் மானிய உதவியுடன் சீமைகருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மிளகாய் பயிரிட மானியம்

இதற்கு மானியமாக சீமை கருவேல மரங்களை அகற்றிட ஒரு எக்டேருக்கு ரூ.7 ஆயிரத்தி 500, மிளகாய் பயிரிடுவதற்கு மானியமாக ரூ.12 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை http://tnhorticulture.tn.gov.in/tnhortinet என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்தும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story