ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் தூத்துக்குடி போல்பேட்டை, ரகுமத்நகர், ஞானபரமேசுவரி காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் சாலை பணிகளையும், சி.வ.குளத்தின் கரையில் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதை மற்றும் தடுப்பு வேலி மற்றும் குட்டத்து மாடசாமி கோவில் குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகளையும் கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story