வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

நீடாமங்கலம்

நீடாமங்கலம் பேரூராட்சியில் கட்டப்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தையும், பரப்பனாமேடுபகுதியில் மேலபூவனூர், பரப்பனாமேடு, ஒரந்தூர், கோரையாறு தலைப்பு பகுதியில் நடைபெற்று வரும் சாலைமேம்பாட்டு பணிகள் மற்றும் காளாஞ்சேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறைகளையும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், காளாஞ்சிமேடு பகுதியில் ரூ.4.53 லட்சம் மதிப்பீட்டில் கீழ தெரு பகுதியில் சாலை அமைக்கப்பட்டுவருவதையும், நாவல்பூண்டி பகுதியில் பாப்பன்குளம் தூர்வாரப்பட்டுவருவதையும், தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகளையும் கலக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க கேட்டுக்கொண்டார்.முன்னதாக, நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் காளாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாமையும் கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வி்ன் போது நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வன், தாசில்தார் பரஞ்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story