வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மன்னார்குடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, மகாதேவபட்டினம் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார். கண்டிதம்பேட்டை, மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்ட கலெக்்டர் சாருஸ்ரீ உள்ளிக்கோட்டை ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை ஆய்வு செய்தார். பின்னர் , மகாதேவப்பட்டினத்தில் ரூ. 17.5 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி மற்றும் சீதாசேகரத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் ரெங்கராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், எம்.என். பாரதி மோகன், ஊராட்சி தலைவர்கள் கண்டிதம்பேட்டை கலைவாணி ராகவன், உள்ளிக்கோட்டை ஜோதிராஜா, மகாதேவப்பட்டினம் மரகதம் ராமையன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story