வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மன்னார்குடியில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட ஜெயினத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருவதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட மன்னை நகர் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் காலனியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வசித்துவரும் மக்களிடம் கலந்துரையாடினார். மேலும் தாமரைக்குளத்தில் உட்புற சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுவதையும், ருக்மணி குளத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சுவர் கட்டும் பணியினையும், மேலநாகை பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தாசில்தார் ஜீவானந்தம், மன்னார்குடி நகராட்சி தலைவர்.மன்னை சோழராஜன், நகராட்சி துணைத் தலைவர் கைலாசம், நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர்.குணசேகரன், ஆகியோர் இருந்தனர்.


1 More update

Next Story