வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
வலங்கைமான் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
வலங்கைமான்;
வலங்கைமான் பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
கலெக்டா் ஆய்வு
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்துக்கு உட்பட்ட நார்த்தாங்குடி ஊராட்சியில் ரூ.32 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுவரும் இரண்டு வகுப்பறை கட்டிடம் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிதளம் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் அங்கான்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை கலெக்்டா் சாருஸ்ரீ ஆய்வு செய்தாா்.
ஆலோசனை
மேலும் ஆலங்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஆலங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், தொடர்ந்து சாரநத்தம் ஊராட்சியில் சாரநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ.33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பள்ளி வகுப்பறைகளையும், சித்தன்வாழுர் ஊராட்சியில் குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வகுப்பறை கட்டத்தினையும், புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கழிவறை, அதே ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தையும் கலெக்்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து உரிய அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
ரேஷன் கடை
தொடர்ந்து, வலங்கைமான் பேரூராட்சி ரேஷன் கடையை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, கமலராஜன், உதவிசெயற்பொறியாளர் ரங்கராஜன், உதவி பொறியாளர் சுகந்தி, வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் பலா் இருந்தனா்.