செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டை கலெக்டர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு ஸ்கேன், ஈ.சி.ஜி. எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து புறநோயாளிகள் சிகிச்சை பகுதி, தீவிர அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, ஊட்டச்சத்து பூங்கா, விபத்து பிரிவு, நோயாளிகளுக்கான குடிநீர் வசதி, மற்றும் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் உள்ளதா? எனவும் அவர் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 70 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டையும் ஆய்வு செய்தார்.
மேலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு ஆஸ்பத்திரி டீன் நாராயணசாம், சுகாதாரதுறை இணை இயக்குனர் பரணிதரன் உள்ளிட்ட டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.