சிக்கம்பட்டி ஊராட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கலெக்டர் கார்மேகம் ஆய்வு


சிக்கம்பட்டி ஊராட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கலெக்டர் கார்மேகம் ஆய்வு
x
சேலம்

சேலம்

மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்குவது குறித்து சிக்கம்பட்டி ஊராட்சியில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு நடத்தினார்.

மகளிர் உரிமை தொகைத்திட்டம்

சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா சிக்கம்பட்டி ஊராட்சியில் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து கலெக்டர் கார்மேகம் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி, ஓமலூர் தாசில்தார் புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு 'மகளிர் உரிமை தொகை' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கம், சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக பொருளாதார ரீதியாக பெண்கள் மேம்படுத்துவதாகும்.

சிறப்பு அலுவலர்

இந்த திட்டத்தின் படி வரையறுக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக சிறப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த திட்டம் குறித்து களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story