மல்லசமுத்திரத்தில்ரூ.89 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு


மல்லசமுத்திரத்தில்ரூ.89 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 Aug 2023 7:00 PM GMT (Updated: 18 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மல்லசமுத்திரத்தில் ரூ.89 லட்சத்தில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

ஆய்வு

புதுச்சத்திரம் அருகே பாச்சலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் சைக்கிள்களை நிறுத்துவதற்கு ஏதுவாக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது எத்தகைய அளவீட்டில் நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது என்பதையும், எத்தனை சைக்கிள்களை அதில் நிறுத்த முடியும் என்பதையும் கலெக்டர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். பின்னர் மல்லசமுத்திரம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருவதை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

உறுதிமொழி ஏற்பு

அப்போது ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து மேல்முகம் கிராமத்தில் பீமரப்பட்டியில் இணையவழி வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகளையும், அத்தப்பம்பாளையம் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரி பார்க்கப்படும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் சிவகுமார், திருச்செங்கோடு தாசில்தார் பச்சமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story