கலெக்டர் ஆய்வு


கலெக்டர் ஆய்வு
x

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை அரண்மனை வளாக சர்ஜா மாடி கட்டிடத்தில் நடைபெற்று வருகிற மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு பணிகளை நல்லமுறையில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியக்ரஹாரம் கோடியம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரம்பலூர் மானாமதுரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருதையும், பின்னர் திருவையாறு ஒன்றியம் மேலஉத்தமநல்லூரிலிருந்து பஸ் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருவதையும் கலெக்டர் பார்வையிட்டு விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று திருவையாறிலிருந்து மேல உத்தமநல்லூர் கிராமத்திற்கு உடனடியாக பஸ்வசதியினை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக அனுமதி சீட்டு பெறப்பட்ட மினி பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது. திருவையாறிலிருந்து மேலஉத்தமநல்லூர் வழியாக மதகடி வரை இந்த பஸ் இயக்கப்படுகிறது. இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் ராம்பிரபு, கீதா வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார்வாகன ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story