வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

நாகை மாவட்ட பகுதிகளில் நடந்து வருவம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்ட பகுதிகளில் நடந்து வருவம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
நாகை நகராட்சி மூலதன மானிய நிதியின் கீழ் காடம்பாடி, மற்றும் பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 4,200 மீட்டர் தூரம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அக்கரைக்குளம் பகுதியில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் பழைய பஸ் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை, சுற்றுச்சுவர், தட்டுஓடு பதித்தல், மின்விளக்கு அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதுபோன்ற வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊராட்சிகள்
அப்போது எரவாஞ்சேரி ஊராட்சியில் ரூ11.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை, ஆனைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்படும் நெல் கொள்முதல் நிலைய பணிகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வின் போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி, செயற்பொறியாளர் பசுபதி, கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், ராஜகோபால், ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






