பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களில் பல்வேறு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களில் பல்வேறு துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையி்ட்டு ஆய்வு செய்தார். அவர் கொல்லங்குடி மேலமருங்கூர், சுந்தரநடப்பு, பருத்திகண்மாய், மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது, மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவைகளின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சோலார் பம்புசெட் மோட்டார்

நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டத்தில் மாவட்டத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 லட்சம் நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பசுமை போர்வை திட்டத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் மாவட்டத்தில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் முழுமையாக ரூ.39.75 லட்சம் மானியத்தில் 531 எக்டேர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறிகள் 200, ரூ.1.94 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முழு மானியத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் சோலார் பம்புசெட் மோட்டார் மொத்தம் 29, ரூ.174 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், துணை இயக்குனர்கள் பன்னீர்செல்வம், அழகுமலை (தோட்டக்கலைத்துறை) மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story