வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வகுரம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக வகுரம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.24.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.4 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி 2-வது தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தார்சாலை அமைக்கும் பணி

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலை பணியினை தரமாக அமைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.72 லட்சம் மதிப்பீட்டில் வகுரம்பட்டி சமத்துவ மயானத்தில் மயான மேடை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், சிங்கிலிப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டு உள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரூ.5 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் சிங்கிலிபட்டியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும், ரூ.12 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியினையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நேதாஜி நகரில் 15-வது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.32 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் நேதாஜி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.92 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், பாஸ்கர், ஊராட்சி மன்றத்தலைவர் ராஜாரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story