ராணுவ தளவாட தொழிற்சாலை அமையும் இடத்தில் கலெக்டர் ஆய்வு
ராணுவ தளவாட தொழிற்சாலை அமையும் இடத்தில் கலெக்டர் ஆய்வு
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் டிட்கோ சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலை அமைக்கப்படும் இடத்தை நேற்று கலெக்டர் கிராந்தி குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது தொழிற்சாலையின் வழித்தடம் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக கள்ளப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பாப்பம்பட்டியில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் கடையில் பொருட்களின் தரத்தை சோதனை செய்தார். மேலும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் சரியான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story