திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வருகை பதிவேடு, பல்வேறு பிரிவுகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள் குறித்த பதிவேடு, சான்றிதழ்கள் வழங்கப்படும் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, கோப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தை பார்வையிட்ட அவர் அங்கு குப்பைகள் கிடந்ததை பார்த்து அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர், தாசில்தார் சிவப்பிரகாசம், தனி தாசில்தார் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story