திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு


திருப்புவனம்   யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆண்டாய்வு தொடர்பாகவும், அதன் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் நேற்று கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவை சார்ந்த அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன் பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலி பணியிடங்கள் குறித்தும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிதிட்ட பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விவரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், நிதிநிலை மற்றும் அலுவலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், கூடுதல் கட்டிடங்கள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக, பகுதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் சித்ரா, அலுவலக மேலாளர் (வளர்ச்சி) திருப்பதிராஜன், திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கன்னி, ராஜசேகரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story