திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கலெக்டர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்
போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மாநில அளவிலான மேற்பார்வை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் மாவட்ட அளவிலான மேற்பார்வை குழு தலைவரான மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் முன்னிலையில் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story