கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு


கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு
x

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி -2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலையின் அறவை பிரிவு, உற்பத்தி பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், ஆலையில் உள்ள எந்திரங்கள் மற்றும் பரிசோதனை கூடங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 2022-2023 -ம் ஆண்டில் ஆலையில் 5.05 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் கரும்புகளை பெற்று உடனடியாக கரும்பு அரவை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மேலாண்மை இணை இயக்குனர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கரும்பு பெருக்க அலுவலர் செந்தில்குமார், ரசாயன பிரிவு அலுவலர் ஜோதி, தொழிலாளர் நல அலுவலர் சிங்காரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story