காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் ஆய்வு
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் தாமல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம்

இது குறித்து அவர் கூறுகையில்:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 30 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. மாவட்டத்தில் முக்கிய ஏரிகளில் தாமல் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரி 10 மதகுகள், 3 கலங்கல்களை கொண்டது. இந்த ஏரியின் மூலம் 938 ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் மக்கள் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் நீரில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் மீன் பிடித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட கூடாது. ஏரிகளை கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் கிராம மக்கள் ஒன்றிணைந்த கிராம குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் நீல்உடையான், இளநிலை பொறியாளர் மார்கண்டேயன், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story