வாரச்சந்தையில் கலெக்டர் ஆய்வு
அவினாசி அருகே பெரியாயிபாளையம் வாரச்சந்தையில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர்
அவினாசி
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பெரியாயி பாளையத்தில் வாரச்சந்தை உள்ளது. பிரதிவாரம் வெள்ளிக்கிழமை அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மளிகை, காய்கறி, அரிசி, பருப்பு வகைகள், ஜவுளி, ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்து பொருட்கள் வியாபாரிகள் இங்கு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. எனவே 15-வது நிதிக்குழு மானியம் ரூ.16 லட்சத்தில் மேம்பாடு, மாவட்ட நிர்வாக ஒப்புதலுடன் ரூ.6 லட்சத்தில் மேற்கூரை, பழைய அம்பாள் காலனியில் ரேஷன்கடை பராமரிப்பு, காமராஜ் நகரில் நகராட்சிக்கு இணையாக கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப்பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களிடம் நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
Related Tags :
Next Story