கடலூர் அருகே வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


கடலூர் அருகே வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

கடலூர் அருகே, வேளாண் திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

கடலூர் ஊராட்சிக்குட்பட்ட உச்சிமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் டி.என்.ஜே.ஏ.எம்.பி. திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள வெண்டை வயலை நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளுடன் கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான், விதை தளை, வரப்பு பயிர் உள்ளிட்டவை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் கோனோவீடர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சூரியஒளி பொறி மற்றும் உளுந்து விதைகள், தார்பாலின் ஆகியவற்றை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

ஆலோசனை

தொடர்ந்து மதலப்பட்டு ஊராட்சி வில்லுப்பாளையம் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் சுமார் 50 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன்-8 விதை பண்ணை வயலை ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டி.என்.ஜே.ஏ.எம்.பி. திட்டத்தின் கீழ், விவசாயி ஒருவர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையை ய்வு செய்து, இந்த திட்டத்தை முறையாக பயன்படுத்தி மேன்மையடையும் வகையில் கலெக்டர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story