காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
என்.எம்.கோவில் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
என்.எம்.கோவில் நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம்.கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்ட செயல்பாட்டினை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது தரமாகவும், சுவையாகவும் உணவு தயாரிக்கபடுவதை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிகளை தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா, பள்ளி வளாகத்தில் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், காலை உணவு சரியான நேரத்தில் வழங்கவதை உறுதிபடுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உதவி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தற்போதைய நிலைப்பாட்டினை குறித்து தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சரியான முறையில் விண்ணப்பிக்காத பயனாளிகள் இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை மொத்தம் 6723 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, உதவி கலெக்டர் பானு, தாசில்தார் சிவப்பிரகாசம், கதிரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மாரி செல்வராஜ், துணைத்தலைவர் வி.வடிவேல், ஊராட்சி செயலாளர் வெங்கடாஜலபதி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.