ஆபத்தான நடைபாலத்தை கலெக்டர் ஆய்வு


ஆபத்தான நடைபாலத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஆபத்தான நிலையில் உள்ள உப்பனாறு பாலத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே ஆபத்தான நிலையில் உள்ள உப்பனாறு பாலத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

இரும்பு நடைபாலம்

சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் தீவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல உப்பனாற்றில் இரும்பு நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த பாலத்தை உபயோகிக்கும் மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் உப்பனாற்றின் கரைகளிலும் வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆற்றின் கரைகளை பலப்படுத்தியும், பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என்ற கிராமமக்கள் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று காலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ரூ.6.83 கோடி நிதி

அப்போது அவர் பாலத்தை சீரமைப்பது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு இருந்த மக்களிடம் அவர் கூறுகையில் விரைந்து நடைபாலம் பழுது நீக்கி தரப்படும் என உறுதி அளித்தார். அதுமட்டுமின்றி பாரத பிரதமர் சாலை திட்டத்தின் கீழ் பாலம் அமைக்க ரூ.6.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் நிரந்தர பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். விடுமுறை நாளான நேற்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டருக்கு அந்த பகுதி பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Next Story