வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வுசெய்தார். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் ரூ.5.26 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, புள்ளானேரி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கே.புதூரில் ரூ.7.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை, ரூ.70 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசப்பட்டுள்ள கோனேரிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம், திரியாலம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.11.91 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பள்ளி சுற்றுச்சுவர், ரூ.3.78 ட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை என மொத்தம் ரூ.28.82 லட்சம் மதிப்பிலான பணிகளை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சாலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மாணவர்கள்
முன்னதாக ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களை தமிழ் பாடத்தை படித்து காண்பிக்க கூறி சோதனை செய்தார். கூறினார். பின்னர் திரியாலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணி, அரசினர் உயர்நிலைப்பள்ளி சமையலறையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், உதவி பொறியாளர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் புள்ளானேரி த.சங்கர், தாமலேரிமுத்தூர் சுதா இளங்கோ, திரியாலம் ஜெயபாரதி ரவிகுமார், திரியாலம் கிராம நிர்வாக அலுவலர் அருணா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.