வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கொள்ளிடம் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர், நல்லூர், ஆரப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணி, கழிவறை கட்டும் பணி, பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story