வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
திமிரி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதியான வேம்பி, மேலப்பாந்தை, வாழப்பந்தல், மாம்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது வேம்பி பஞ்சாயத்தில் இரண்டு பள்ளி கட்டிடம், ஆஞ்சநேயர் கோவில் குளம், மேலப்பாந்தையில் உள்ள நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் வாழைப்பந்தல் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், வாழைப்பந்தல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
மேலும் மாம்பாக்கம் சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு கேட்டு அறிந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ, சனாவாஸ், உதவி பொறியாளர் தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனபால், முனுசாமி, குமாரி ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.