வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பெரும்புலிப்பாக்கம், கரிவேடு, ஓச்சேரி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். பெரும்புலிப்பாக்கம் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் தொகுப்பு வீடுகள், அங்குள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து உணவு தரத்தை உயர்த்த ஊழியருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அங்குள்ள பெற்றோரிடம் வீடுகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்து கீரை வகைகள், கேழ்வரகு போன்ற சத்தான உணவுகளை வழங்க அறிவுரை வழங்கினார்.
மண்புழு உரம் தயாரிப்பு
பின்னர் கரிவேடு ஊராட்சியில் கடந்த 6 மாததிற்கு முன்பு அமைக்கப்பட்ட நர்சரியில் வளர்க்கப்படும் செடிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ஓச்சேரியில் உள்ள மண் பூழு உரம் தயாரிக்கும் கூடம், உரிஞ்சு குழி அமைக்கப்பட்ட இடம் ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜெயந்திபிச்சாண்டி, சங்கீதா தாஸ், சங்கீதா ஜெயகாந்தன், துணை தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, பாலாஜி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உடனிருந்தனர்.