வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

மயிலாடுதுறை அருகே அனைமேலகரம், மூவலூர் ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைமேலகரம் கிராம ஊராட்சியில் முஸ்லிம் கீழத் தெருவில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரூ.6 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் இந்திரா நகரில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி, அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

இதேபோல மூவலூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர வரவு,செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தார். பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு வீடுகளை தரமாக கட்ட உத்தரவிட்டார்.

வடிகால் கட்டும் பணி

தொடர்ந்து மூவலூர் ஊராட்சியில் மார்க்க சகாயசாமி கோவில் வீதிகளில் அமைக்கப்பட்டு வரும் வடிகால்கள் கட்டும் பணியையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஒன்றிய பொறியாளர் மகேஸ்வரி மற்றும் ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


Next Story