வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடம் புனரமைத்தல் பணியை கலெக்டர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து வடமாத்தூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

இதனையடுத்து மேல்நாச்சிப்பட்டு, ஒரவந்தவாடி, காஞ்சி உள்பட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள், ஏரி தூர் வாரும் பணிகள் மற்றும் கூட்டுறவு கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) லட்சுமிராணி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உதயசேகரன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


Next Story