வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:46 PM GMT)

சங்கராபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் ஒன்றியம் விரியூர் ஊராட்சிக்குட்பட்ட அரசராம்பட்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாய பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த தொழிலாளர்களிடம் முறையாக முழு ஊதியம் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டு்ப்பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, சமையல் கூடம் பழுது நீக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து ராமராஜபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் வடிகால் வாய்க்கால் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை பணியையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பணியை விரைந்து முடிக்க வேண்டும்

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை நல்ல தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் செல்வராணி, செயற்பொறியாளர் மலர்விழி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேஷ், ஒன்றிய பொறியாளர் கோமதி, பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலெக்ஸ்சாண்டர், செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மூங்கான், சனாவுல்லா, ஊராட்சி செயலாளர்கள் அருள், ஆபேல் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story