வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது புதுமல்லவாடி ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்களா?, பயனாளிகள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களா? என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடக் கட்டமைப்புகள் தரமான முறையில் உள்ளதா, பள்ளிக்கட்டிட அடிப்படை வசதி குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து வி.கே.பாடி கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளையும் பார்வையிட்டார். மங்கலபுதூரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சுற்றுசுவர் பணி, மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம செயக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டப்பட உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story