வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
பூங்குளம் கிராமத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், பூங்குளம் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 35 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி, ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி, மாஞ்செடிகள் நடவு செய்யும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 226 மதிப்பிலான பல்வேறு வகையான வேளாண் இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலிதினகரன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி
பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.