வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் தொப்பா ஊரணி சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து, பரிசல்கல்பாறை பகுதியில், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினையும், மேலும் கவிநாடு கிழக்கு ஊராட்சியில், திருமயம் சாலையிலிருந்து கணக்கன்பட்டி வரை செல்லும் 2 கி.மீ. நீளமுள்ள சாலை, முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.83.94 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.

இதேபோல திருக்கோகர்ணம் யானையம்மாள் வீதி மற்றும் 9 ஏ நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் மற்றும் கவிநாடுகிழக்கு குமரன்நகர் ஆகிய பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story