வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
x

ஆக்கூர் ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

திருக்கடையூர் அருகே ஆக்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆக்கூர்-கருவேலி சாலை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58.15 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலையாக மேம்படுத்தப்பட்டு வருவதை பார்வையிட்டு பணியின் தரத்தை ஆய்வு செய்தார்.பின்னர் ஆக்கூர் அரசு சமூக சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சுகாதார துறை துணை இயக்குனரிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர்அன்னப்பன்பேட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி,வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், ஆக்கூர் ஊராட்சி தலைவர் சந்திரமோகன், துணைத் தலைவர் சிங்காரவேலன் மற்றும் பலர் சென்றனர்.

1 More update

Next Story