வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு


வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:19 AM IST (Updated: 7 Sept 2023 12:20 AM IST)
t-max-icont-min-icon

வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி, புதிய பஸ் நிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:- புதுக்கோட்டை நகராட்சி, புதிய பஸ் நிலையம் எதிரில், மழைக்காலத்தையொட்டி வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த வரத்து வாய்க்கால்கள் தூர்வாருவதன் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் சீராக செல்வதற்கு உதவியாக இருக்கும். மேலும் வரத்து வாய்க்கால்களை உரிய காலத்திற்குள் விரைவாக தூர்வாரிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், உதவிப்பொறியாளர் கலியகுமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story