நீர்நிலைகளுக்குரிய வரத்துவாரிகளை தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு


நீர்நிலைகளுக்குரிய வரத்துவாரிகளை தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x

கீழக்கரை பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்குரிய வரத்துவாரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம குட்டைகள், குளங்கள் மற்றும் வரத்து வாரி தூர்வாரும் பணிகளை வேளாண்மை பொறியியல் துறை அலுவலக இயந்திரங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் தங்கும் பரப்பில் உள்ள முட்புதர்கள் அகற்றி வண்டல் மண் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி செய்யப்பட்ட பணிகளை மாவட்ட மாவட்ட கலெக்டர்.கற்பகம பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நீர்வள தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர்வரத்து பரப்பினை அதிகப்படுத்திடவும், தடுப்பணையின் கீழ் உள்ள வாரிகளை அகலப்படுத்திடவும், நீர் தங்கு தடையின்றி வெளியேறிடவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுகளில் இணை இயக்குனர் (வேளாண்மை துறை) சங்கர்.எஸ்.நாராயணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர்.அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story