உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு
ஆம்பூர் அருகே உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அடுத்த சோலூர் கிராமத்தில் உழவர்சந்தை அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தினை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story