காலை உணவு திட்டத்தின் கீழ்மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் ஆய்வு


காலை உணவு திட்டத்தின் கீழ்மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 988 பள்ளிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 32 பள்ளிகள் என மொத்தம் 1,020 பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காணை ஒன்றியம் ஆயந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் சி.பழனி, அப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவின் தரத்தை பார்வையிட்டதோடு அந்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு சுகாதாரமாக காலை உணவு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உணவை உண்டு சுவை மற்றும் தரத்தை உறுதி செய்ய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story